பிரான்ஸில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் இளைஞர்கள்!

You are currently viewing பிரான்ஸில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் இளைஞர்கள்!

பிரான்ஸில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில், மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் என்று ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார். பாரிஸின் புறநகர் பகுதியில் நெயில் எம் (17) என்ற சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வெளியிட்டுள்ள பதிவில், ‘நேற்றிரவு கைது செய்யப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இளைஞர்கள், சில சமயங்களில் மிகவும் சிறியவர்கள். நான் பெற்றோர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

அதே போல் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகளிடம், ‘அடுத்த மணிநேரங்கள் தீர்க்கமானதாக இருக்கும், உங்கள் குறைபாடற்ற முயற்சிகளை நான் நம்ப முடியும் என்று எனக்குத் தெரியும்’ என்று தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments