பொருளாதார மீட்சியில் இலங்கையோடு இணைந்திருப்போம்! கனேடிய உயர்ஸ்தானிகர்!

You are currently viewing பொருளாதார மீட்சியில் இலங்கையோடு இணைந்திருப்போம்! கனேடிய உயர்ஸ்தானிகர்!

பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தில் கனடா தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்திருக்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடா கூட்டமைப்பின் 156ஆவது ஆண்டை முன்னிட்டு இன்று(01.07.2023) கொண்டாடப்படும் கனடா தினத்துக்கான வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத கடினமான ஒரு பொருளாதார நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கனடா பொருளாதார உதவி என்ற ரீதியில் தமது பங்களிப்பை வழங்கி வருகிறது.

அதேநேரம் அர்த்தபூர்வமான, நீடிக்கும் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு தமது சொந்த அனுபவங்களிருந்து ஆதரவளிப்பதற்கும் கனடா தயாராகவிருப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments