இன்று இரவு தொலைக்காட்சியில் ஜனாதிபதி மக்ரோன் உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த உரை பிற்போடப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 13 ஆம் திகதி ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கான உரையை நிகழ்த்த உள்ளார். ஜனாதிபதியின் எலிசே மாளிகை தரப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நிலைமைகள், முக்கியமான விடயங்களை பற்றி மக்ரோன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்ததின் பின்னர் மார்ச் 12 மற்றும் மார்ச் 16 ஆம் திகதிகளில் மக்ரோன் உரையாற்றியிருந்தார். அதைத் தொடர்ந்து இடம்பெற உள்ள மூன்றாவது உரை இதுவாகும்.
ஏப்ரல் 15 ஆம் திகதி வரை உள்ளிருப்பு சட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த திகதிக்குப் பின்னரும் ‘உள்ளிருப்பு சட்டம்’ தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் எத்துவார் பிலிப் செவ்வாய்க்கிழமை பாராளு மன்றத்தில் இதனை குறிப்பிட்டிருந்தார். “ஏப்ரல் 15 ஆம் திகதியின் பின்னரும் உள்ளிருப்பு தொடரும்”என அவர் தெரிவித்திருந்தார். எவ்வளவு காலம் என்பதை பிரதமர் குறிப்பிடவில்லை.