பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அறிவித்தல்!

You are currently viewing பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அறிவித்தல்!

அன்பான எங்கள் தேசவிடுதலைப்பணியாளர்களே! உணர்வாளர்களே! வணக்கம்!

 01.04.2020.
   சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்கு சம்பவித்திருக்கின்றது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம் மக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்;. நோயும் பிணியும் உடல் நலிந்து முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் சர்வதேசமெங்கும் தோய்ந்து கிடக்கின்றது.
   இன்றைய கொடிய கொன்வாட்19 ( கொரோனா) வைரசினால் எம்மின மக்களின் உறுதிப்பாட்டை உடைக்க முற்பட்டாலும் நீங்களும், எமது மக்களும் அதிலிருந்து மீண்டு வரவேண்டும். அதற்கான விழிப்புணர்வை நீங்களும் அடைந்து மக்களுக்கும் விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும். ஆதலால்
   எம் தேசத்தின் செயற்பாட்டாளர்களே! உங்கள் அனைவரினதும், குடும்பத்தினதும் உற்றார் உறவுகளுடன் சந்தோசமாகவும், நிம்மதியாகவும், இருப்பதுடன் உங்கள் அனைவரின் நலன் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று , அறியவும் விரும்புகின்றோம்.
   எங்கள் ஒவ்வொருவரின் சுயகட்டுப்பாடும், சுகாதாரப் பாதுகாத்தலைக் கடைப்பிடிப்பதுவுமே அனைவருக்கும் நன்மை பயக்கும்.
   உங்கள் அனைவரின் நலனில் பாதுகாப்பில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் , அதன் உப கட்டமைப்புக்களும் பங்கேற்கின்றது என்பதையும் இத்தால் அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்’’

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.

நன்றி

பகிர்ந்துகொள்ள