பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று!

You are currently viewing பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று!

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 56 லட்சத்து 03 ஆயிரத்து 666 ஆக உள்ளது.

ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 08 ஆயிரத்து 596 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51.99 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், தற்போது 2.95 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் 30 சதவீத மக்களுக்கு கொரோன தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. எனவே அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments