ரஷ்ய ஜனாதிபதியின் கூலிப்படையில் இணைய விண்ணப்பித்துள்ள 10 மில்லியன் அமெரிக்க இளைஞர்கள்!

You are currently viewing ரஷ்ய ஜனாதிபதியின் கூலிப்படையில் இணைய விண்ணப்பித்துள்ள 10 மில்லியன் அமெரிக்க இளைஞர்கள்!

ரஷ்ய ஜனாதிபதியின் கூலிப்படை என அறியப்படும் Wagner குழுவில் இணைய 10 மில்லியன் அமெரிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக அந்த குழுவின் நிறுவனர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் Wagner கூலிப்படை நிறுவனர் Yevgeny Prigozhin தெரிவிக்கையில், ரஷ்ய சிறைக்கைதிகளை உக்ரைனுக்கு எதிராக களமிறக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், பதிலுக்கு புதிய திட்டமொன்றை அமுலுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் Wagner கூலிப்படை அமெரிக்க இளைஞர்களை குறிவைத்து, விளம்பரம் செய்திருந்தது. அது மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சுமார் 10 மில்லியன் அமெரிக்க குடிமக்கள் தங்கள் குழுவுடன் இணைந்து நேட்டோ நாடுகளுக்கு எதிராக களமிறங்க விண்ணப்பித்துள்ளதாக Prigozhin தெரிவித்துள்ளார்.

இதுவரை 10 மில்லியன் விண்ணப்பங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், ஆனால் முதல் கட்டமாக 1 மில்லியன் அமெரிக்கர்களை தங்கள் குழுவில் இணைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் Prigozhin தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே ரஷ்ய சிறைவாசிகளை போரில் களமிறக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என எனவும், மிக சொற்ப எண்ணிக்கையிலான அமெரிக்கர்களே ரஷ்யாவுக்கு ஆதரவாக தற்போது களத்தில் இருப்பதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க மக்களை இலக்கு வைத்து Wagner கூலிப்படை வெளியிட்ட காணொளியில், அமெரிக்காவை பெருமைப்படுத்த ராணுவத்தில் பணியாற்றியுள்ள வீரர்களுக்கு, மீண்டும் ஒரு அருமையான வாய்ப்பு.

தீய சக்திகளை ஒடுக்க நாம் ஒன்று சேர வேண்டிய தருணம் இது. அமெரிக்காவை உருவாக்கிய மக்கள் கனவு கண்ட அமெரிக்கா அல்ல தற்போதைய அமெரிக்கா. தீய சக்திகளுக்கு எதிராக போராடும் உண்மையான நாடு ரஷ்யா மட்டுமே என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments