புதிய உலகப் போரை அறிவிக்கவிருக்கும் புடின்: பிரித்தானிய அமைச்சர் எச்சரிக்கை!

You are currently viewing புதிய உலகப் போரை அறிவிக்கவிருக்கும் புடின்: பிரித்தானிய அமைச்சர் எச்சரிக்கை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்னும் சில நாட்களில் புதிய உலகப் போரை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். மே தின கொண்டாட்டங்களின்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உலகமெங்கிலும் உள்ள நாஜிகளுக்கு எதிராக புதிய உலகப் போரினை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24 அன்று புடின் தனது அண்டை நாடு மீது படையெடுப்பைத் தொடங்கிய போது, உக்ரைனை நாஜிகளிடமிருந்து விடுவிப்பதற்கான ஒரு சிறப்பு நடவடிக்கை இது என்று மக்களிடம் விளக்கமளித்திருந்தார்.

அன்று தொடங்கி, கடந்த இரண்டு மாத காலமாக ரஷ்யா கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் இந்த சிறப்பு நடவடிக்கையானது இன்னும் 10 ஆண்டுகள் வரையில் நீடிக்கலாம் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் Liz Truss குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மேற்கத்திய நாடுகள் பல உக்ரைனுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதங்களை அளித்து வருவதில் கோபமடைந்த ரஷ்யா, இது ஆபத்தான போக்கு எனவும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், உக்ரைனுடனான போரில் புடின் தனது பெரும்பாலான நோக்கங்களில் தோல்வியடைந்துள்ளார் என குறிப்பிட்டுள்ள பென் வாலஸ், இன்னும் சில நாட்களில் அவர் உலகப் போருக்கான அறிவிப்பை வெளியிடலாம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவில் போர் வெற்றி விழாவுக்கான ஒத்திகை தொடங்கியுள்ளதாகவும், மே தின கொண்டாட்டங்கள் களைகட்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments