நோர்வேயின் ஆளுமைக்குட்பட்ட கடல்பகுதியில் புதிய எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் “ConocoPhillips” என்னும் எண்ணெய்வள ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிகவும் கனதியான எண்ணெய்வளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், சுமார் 75 தொடக்கம் 200 மில்லியன் பீப்பாய்கள் கொள்ளளவில் இந்த எண்ணெய் வளம் இருக்கலாமெனவும், பல பில்லியன் நோர்வே குறோணர்கள் பெறுமதியானது எனவும் தெரிவித்துள்ளது.
கடலில் ஆழத்தில் சுமார் 2179 மீட்டர்கள் ஆழ்துளை போடப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது இத்தகவல்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்திருக்கும் மேற்படி நிறுவனம், கண்டறியப்பட்டுள்ள புதியவளம், நோர்வேயின் எண்ணெய்வளம் தொடர்பான உறுதிப்பாட்டை மேலும் 50 வருடங்களுக்கு ஒப்பான காலப்பகுதிக்கு நீடிக்கும் வாய்ப்பை வழங்குமெனவும் தெரிவித்துள்ளது.