பாராளுமன்ற நிதிக் குழுவினர் இரவு முழுவதும் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு புதிய நிதி நெருக்கடி நிவாரண திட்டத்துக்கு உடன்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகள் சில:–
- Arbeidsgjevaravgift (AGA) இரண்டு மாதங்களுக்கு 4 சதவீத புள்ளிகளால் குறைக்கப்படுகின்றது.
- தொற்றுநோயின் விளைவாக NAV, Kommunar மற்றும் Helsevesenet எதிர்கொள்ளும் கூடுதல் செலவுகளுக்கான நிதி ஈடுசெய்யப்படும்.
- கொரோனா தொற்று நோயின் விளைவாக வருமான இழப்பை சந்திக்கும் மாணவர்களுக்கு மாணவர் கடன் நிதியின் (Lånekassen) மூலம் தற்காலிக உதவி ஏற்பாட்டை அரசாங்கம் விரைவில் வழங்கும்.
- ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தேசிய நெடுஞ்சாலை, படகுகள் கட்டணங்களை குறைப்பதற்கான திட்டங்களுடன் அரசாங்கம் விரைவில் வரும்.
- வயது வந்தோர் கல்வி, பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றிலிருந்து Online மூலம் கல்வி கற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
- வருமான இழப்புக்கான இழப்பீட்டுத் திட்டம், கலாச்சாரத் துறைக்கு 300 மில்லியனும், விளையாட்டு மற்றும் தன்னார்வ துறைக்கு 600 மில்லியனுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இந்த புதிய திட்டங்களை செயல்படுத்துவது என்பது குறித்து அரசாங்கம் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பை ஒன்றை நடத்தவுள்ளது.
மேலதிக விபரம்: NRK.no