“கொரோனா வைரஸ் என்ற சக்திவாய்ந்த கடலில் அமெரிக்காவை மூழ்கடிப்போம்” சீனா அச்சுறுத்தல்!

  • Post author:
You are currently viewing “கொரோனா வைரஸ் என்ற சக்திவாய்ந்த கடலில் அமெரிக்காவை மூழ்கடிப்போம்” சீனா அச்சுறுத்தல்!

அமெரிக்காவின் பெரும்பாலான மருந்துகளை சீனா உற்பத்தி செய்கின்றது. இப்பொழுதுள்ள கொரோனா நெருக்கடியில் சீனா இதை ஒரு அழுத்த ஆயுதமாக பயன்படுத்தும் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர்.

கொரோனா தொற்றுநோயை அடுத்து, சீனாவும் அமெரிக்காவும் பல அவதூறு வார்த்தைகளையும், மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்களையும் பரிமாறிக்கொள்கின்றன. இப்போது வர்த்தகப் போரில், முக்கிய மருந்துகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்!

சீன அரசு செய்தி நிறுவனமான Xinhua ஒரு கட்டுரையில், அமெரிக்கா தனது கழுத்தை வளைத்து சீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது. இல்லையெனில், சீனர்கள் “அமெரிக்காவிற்கு மருந்துகள் மற்றும் உபகரணங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய முடியும். பின்னர் அமெரிக்கா கொரோனா வைரஸின் வலிமையான கடலில் மூழ்கிவிடும்” என்று அந்த கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக விபரம்: NRK.no

பகிர்ந்துகொள்ள