பூச்செண்டுடன் மஹிந்தவைச் சந்தித்த சீனத் தூதுவர்!

You are currently viewing பூச்செண்டுடன் மஹிந்தவைச் சந்தித்த சீனத் தூதுவர்!

சீனத் தூதுவர் நேற்று முன்னாள் ஜனாதிபதி இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இதன் போது இன்று கொண்டாடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீன அரசாங்கத்தின் முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த சீன அரசாங்கத்திற்கும் சீன மக்களுக்கும் தூதுவருக்கும் இனப்படுகொலையாளி மஹிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பேணப்பட்டு வரும் வலுவான உறவுகளையும், நீண்டகால நட்புறவையும் இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்ஷ ஞாபகப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply