கடந்த 24 மணி நேரத்தில் நகரத்தில் 36 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் (Beijing) மேலும் பத்து சுற்றுப்புறங்களை சீனா மூடுகின்றது என்று AFP செய்தி நிறுவனம் எழுதியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், தலைநகரில் 50 நாட்களின் பின்னரான முதல் நோய்த்தொற்றால் நகரத்தில் 11 பகுதிகள் மூடப்பட்டன. நோய்த்தொற்றின் அனைத்து பரவலும் நகரத்தின் மிகப்பெரிய இறைச்சி சந்தையுடன் இணைக்கப்படுகின்றது.
சந்தையில் பணிபுரியும் சுமார் 10,000 பேர் இப்போது சோதிக்கப் படவுள்ளனர் என்று BBC எழுதியுள்ளது.
சனிக்கிழமையன்று, சந்தையில் பரிசோதிக்கப்பட்ட 517 பேரில் 45 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது