பொதுமகனிடம் பணத்தை பறித்த சிறீலங்கா காவற்துறை!

You are currently viewing பொதுமகனிடம் பணத்தை பறித்த சிறீலங்கா காவற்துறை!

மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் வேலை முடித்துவிட்டு ஏறாவூரிலுள்ள தனது வீட்டுக்கு  இரவு 11 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்த ஒருவரிடம்  வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறீலங்கா காவற்துறையினரை 6,500 ரூபா பணத்தை பறித்தொடுத்த சமபவம் தொடர்பாக ஏறாவூர் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் கடமையாற்றும் 3 சிறீலங்கா காவற்துறையினரை  இன்று (11)  அதிகாலையில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நபர் புதன்கிழமை இரவு ஏறாவூர் மிச் நகரிலுள்ள வீட்டிற்கு மோட்டர் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த பொது ஜீப் வண்டியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு சிறீலங்கா காவற்துறை சாஜன் உட்பட 3 பேர் குறித்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதனையடுத்து குறித்த நபருக்கு அடையாள அட்டை இல்லாததையடுத்து அவரை தமது ஜீப் வண்டியில் ஏற்றி அந்த பகுதி வீதிகளில் சுற்றிதிரிந்து  25 ஆயிரம் ரூபா பணம் தந்தால் விடுவதாக அல்லது கைது செய்து சிறையில் அடைப்பதாக அச்சுறுத்திய நிலையில் அவர் தன்னிடம் பணம் இல்லை 6500 ரூபா மாத்திரம் தான் இருக்கின்றது என தெரிவித்த போது அந்த  பணத்தை அவரிடமிருந்து பறித்தெடுத்து விட்டு ஜீப் வண்டியில் இருந்து அவரை இறக்கி விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்திற்கு சென்றதையடுத்து உடனடியாக அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற் கொண்டு அவர்களை கைது செய்யமாறு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஓப்படைக்கப்பட்டதையடுத்து 3 பொலிஸாரை  இன்று அதிகாலை 5.30 மணிக்கு கைது செய்து மட்டு தலைமையக சிறீலங்கா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்..

இதல் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments