வீதிகள், கடற்கரைகள், பூங்காக்கள், மைதானங்கள் போன்றவற்றில் பொதுமக்கள் நடமாடுவதற்கும் காணப்படுவதற்கும் தடை விதிக்கும் விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
நேற்று மாலை ஆறு மணி முதல் நான்காம் திகதி காலை ஆறு மணிவரை இந்த தடை நீடிக்கும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது காவல்மா அதிபரின் எழுத்துமூல அனுமதியுடன் மாத்திரம் மேற்குறிப்பிட்ட இடங்களிற்கு பொதுமக்கள் செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தடையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன