பொறுப்புக்கூறல் சீர்திருத்தங்களிற்கான வாய்ப்புகளை தவறவிட்டுள்ளன!

You are currently viewing பொறுப்புக்கூறல் சீர்திருத்தங்களிற்கான வாய்ப்புகளை தவறவிட்டுள்ளன!

இலங்கையின் நல்லிணக்க சட்ட மூலங்கள் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கரிசனை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது

சமீபத்தில் வர்த்தமானியில் வெளியாகியுள்ள நாட்டின் தேசியநல்லிணக்கம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்கள்  மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டமூலங்கள் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

தேசிய ஐக்கிய அலுவலகம் மற்றும் நல்லிணக்க சட்டமூலம் தற்போது நாடாளுமன்றத்தின் முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது  –  ஜனவரி 2024 முதலாம் திகதி  வர்த்தமானியில் வெளியான இலங்கையில் உண்மை ஐக்கியம்  நல்லிணக்கத்திற்கான சட்ட மூலம்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னரும் இலங்கையில் மோதலையும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலையும்  நிரந்தரமாக்கிய பலசவால்களை இலங்கை தொடர்ந்தும் எதிர்கொள்கின்றது என்பதை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோள்களிற்கு தீர்வை காணவேண்டும் இலங்கையின் வரலாற்றுடன் நேர்மையான நல்லிணக்கத்தை காண்பதற்கான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் உறுதியாக நம்புகின்றது.

இந்த இரண்டு சட்ட மூலங்களும் இந்த கரிசனைகளிற்கு தீர்வை காணதவறியுள்ளன

மேலும் இலங்கையின் நிரந்தர சமாதானம் மற்றும் ;ஸ்திரதன்மைக்கு  அடிப்படையான நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் சீர்திருத்தங்களிற்கான வாய்ப்புகளையும் தவறவிட்டுள்ளன.

ஒன்யுஆர் சட்ட மூலத்தை ஆராயும்போது நல்லிணக்கம் மற்றும் சமாதானம் திட்டங்களை முன்னெடுப்பதில் சமூக மட்ட அமைப்புகளிற்கு உதவுவதில் வழிகாட்டுவதில் அலுவலகத்தின் பங்களிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் கரிசனையை ஏற்படுத்துகின்றது.

ஒருங்கிணைந்த தேசிய  ஐக்கிய கொள்கையை உருவாக்குவதில் அரசாங்கம் உண்மையான ஆர்வத்தை கொண்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் சிறிதளவும் நம்பிக்கையில்லாத  சூழமைவின் அடிப்படையிலேயே இந்த கரிசனை உருவாகியுள்ளது.அரசாங்கத்தின் நல்லிணக்கம் பற்றிய கருத்தினை- விளக்கத்தினை சட்டபூர்வமாக்குவதற்கும் மக்கள் மீது திணிப்பதற்கும் இந்த சட்டமூலம் ஒருசாக்குபோக்காக இருக்ககூடாது.பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் இது பயன்படக்கூடாது.

இரண்டாவதுயோசனை- உத்தேச ஆணைக்குழு தொடர்பானது கடந்தகாலங்களில் ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை  இலங்கையின் தொடர் ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்த தவறியுள்ளதால் புதிய ஆணைக்குழு அவசியமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.மேலும் நிலஅபகரிப்புகளும்  இனவாதமும் அபகரித்து வருகி;ன்ற தருணத்தில் இந்த இரண்டு சட்டமூலங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மாற்றுக்கொள்கை நிலையம் இந்த விவகாரங்களை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது சகவாழ்வை அச்சுறுத்தும் மோதலுக்கான தூண்டுதல்களை அதிகப்படுத்தும் இவ்வாறான விடயங்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments