மட்டக்களளப்பு சிறீலங்கா தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் வைத்து மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இருதயபுரம் ஆலயத்தில் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் நேற்று இரவு மாநகரசபை உறுப்பினர் தரணிராஜ் மற்றும் அவரது சகோதரர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
ஆலயத்தில் நடைபெற்ற வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.






