மட்டக்களப்பு மாவட்டத்தில் 330கொரனா தொற்றாளர்கள் அடையாளம்; வைத்தியர் நாகலிங்கம் மயூரன்!

You are currently viewing மட்டக்களப்பு மாவட்டத்தில் 330கொரனா தொற்றாளர்கள் அடையாளம்; வைத்தியர் நாகலிங்கம் மயூரன்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 28 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 02 பேர் மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12)காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மூன்றாவது கொவிட் அலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 330பேர் கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 07மரணங்கள் இந்த மூன்றாவது அலையில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 28கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 02 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆரையம்பதி சுகாதார பிரிவில் 08பேரும் மட்டக்களப்பு மற்றும் ஓட்டமாவடி சுகாதார பிரிவில் தலா 07பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் 03பேரும் வாழைச்சேனை,பட்டிப்பளை,செங்கலடி ஆகிய சுகாதார பிரிவுகளில் தலா ஒருவரும் கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று மரணங்களாக ஒருவர் மட்டக்களப்பு சுகாதார பிரிவிலும் ஒருவர் ஆரையம்பதி சுகாதார பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.ஆரையம்பதி சுகாதார பிரிவில் மரணித்தவர் அவர் மரணித்ததன் பின்னரே அவர் கொரனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1313 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 16மரணங்களும் இடம்பெற்றுள்ளன.மூன்றாவது அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 330கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 07மரணங்கள் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 54பேர் கொரனா தொற்றுக்குள்ளாகும் நிலையேற்பட்டுள்ளது.இதில் வாழைச்சேனை பகுதியில் அதிகளவாக 129ஆகவும் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 105ஆகவும் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றினால் ஏற்படும் மரண வீதமானது 2.1ஆக காணப்படுகின்றது.இது தேசிய ரீதியில் 0.6ஆக காணப்படுகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் மரண வீதம் மூன்று மடங்கிற்கும் அதிகமாக காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரண வீதம் அதிகமாகவுள்ளதன் காரணமாக பொதுமக்கள் இதன் ஆபத்து நிலையினை அறிந்துகொண்டு சுகாதார நடைமுறைகளை இறுக்கமான முறையில் பின்பற்றவேண்டும். காய்ச்சல்,சுவாசம் தொடர்பான குணம்குறிகள் இருமல்,தடுமல்,மூச்சு கஸ்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியரை நாடி சரியான சிகிச்சைகளைப்பெற்றுக்கொள்ளவும். அத்துடன் வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்கள், சென்றுவந்தவர்கள், அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தாமாக முன்வந்து உங்களுக்குரிய சுகாதார பிரிவுக்கு சென்று அன்டிஜன்,பீசிஆர் பரிசோதனைகளை செய்வதன் மூலம் உங்களையும் நாட்டு மக்களையும் பாதுகாத்துக்கொள்ளமுடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கொரனா சிகிச்சை நிலையங்கள் உள்ளன.

பெரியகல்லாறு,காத்தான்குடி,கரடினயனாறு ஆகிய வைத்தியசாலைகளில் இந்த சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதில் சிகிச்சை பெறுபவர்களின் 70வீதத்திற்கும் அதிகமானவர்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் இவர்கள் பத்து தினங்களின் பின்னர் வீடு செல்லமுடியும்.

அவர்களுக்கான போக்குவரத்துகள் அந்ததந்த மாவட்டங்கள் ஏற்பாடு செய்துதர வேண்டியுள்ளது.இருந்தும் அவர்கள் வாகனங்களை அனுப்பாத சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்கள் வாகனத்தின் மூலம் அவர்களை அங்கு அனுப்பவேண்டிய நிலையிருக்கின்றது.இதன் காரணமாக சிகிச்சை பெறுவோரை அனுப்புவதற்கு சிறு தாமத நிலையேற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments