இன்று Bondyஇல் நடைபெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்புப்போராட்டம்

You are currently viewing இன்று  Bondyஇல் நடைபெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்புப்போராட்டம்

இனறு பிரான்சு புறநகர் பகுதியான  Bondy நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தலும் மே-18 தமிழின அழிப்பு நினைவேந்தலும். 

இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். அதற்கான முன்நகர்வையும் ஆதரவையும்  பிரான்சு அரசாங்கம் 

மேற்கொள்ள வேண்டும். பிரான்சு நாட்டில் உள்ள நகரசபைகள் பிரான்சு அரசிடம் இதை வலியுறத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இனப்படுகொலைக்கான நிழற்பட காட்சிப்படுதலும் பாரிஸ் நகரிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் நடைபெற்று வருக்கின்றது. 

இன்று 11.05.2021 10h00 மணி முதல் 17h00 மணிவரை Bondy நகரசபை முன்றலில் குறித்த கவனயீர்பு  நடைபெற்றது. 

இந்த கவனயீர்ப்பின் போது Bondy நகரசபை நகர சபையின் முதல்வர் Stéhen Hervé . மற்றும் பிரதி நகர சபை முதல்வர்  அவர்களுடன் சந்திப்பு இடம்பெற்று எமது கோரிக்கையடங்கிய  மனுவும் வழங்கப்பட்டது.

கடந்த 27 ஆம் திகதி மார்ச் மாதம் Bondy

நகரசபை இலங்கை நடந்தது தமிழினப் படுகொலை என்றும் இலங்கை தமிழர்களுக்கு தமிழீழம் தான் தீர்வு என்றும் இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் 

தீர்மானம் ஒன்றை நகர சபையில் நிறைவேற்றியுள்ளது  என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்று Bondyஇல் நடைபெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்புப்போராட்டம் 1
இன்று Bondyஇல் நடைபெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்புப்போராட்டம் 2
இன்று Bondyஇல் நடைபெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்புப்போராட்டம் 3
இன்று Bondyஇல் நடைபெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்புப்போராட்டம் 4
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments