மண் மாபியா கும்பல் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

You are currently viewing மண் மாபியா கும்பல் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் சிறீலங்கா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், திங்கட்கிழமை இரவு(14) கந்தளாய் பகுதியில் வைத்து, மேற்கொள்ளப்பட்டதோடு, குறித்த, கொலை மிரட்டலையும் தாக்குதல் முயற்சியையும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலே மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர், அன்றைய தினம் இரவு 11 மணியளவில், தனது பகுதி நேர தொழிலான, CCTV கமரா பொருத்தும் பணியில், கந்தளாய் நகரில் ஈடுபட்டிருந்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply