நோர்வே மத அமைப்புக்களில் ஒன்றான “Visjon Norge” என்ற கிறிஸ்தவ மத அமைப்பு, தனது தொலைக்காட்சியூடான மிரச்சாரத்தின்போது, தமது மத அமைப்பிற்கு 2020 குரோணர் பணத்தினை ஒவ்வொருவரும் அன்பளிப்பாக வழங்கவேண்டும் எனவும், அவ்வாறு அன்பளிப்பவர்களையும் அவர்களது குழந்தைகளையும் கொரோனா வைரஸ் தாக்கம்திலிருந்து கடவுள் காப்பார் எனவும் தெரிவித்தது.
மேற்படி விடயம் இன்றைய நோர்வே ஊடகங்களில் பிரதான செய்தியாக வெளியாகியுள்ளதோடு, மக்களினையே கடும் அதிருப்திகளையும் தோற்றுவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகெங்கும் மக்கள் கலக்கமடைந்திருக்கும் நிலையில், மக்களின் மதநம்பிக்கையை பாவித்து பொருளாதார நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட மேற்படிபிரச்சார நடவடிக்கை பரவலான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
தமது மதநம்பிக்கை தொடர்பான வேலைத்திட்டங்களுக்காகவே மக்களிடம் பணம் கேட்டதாக மேற்படி அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.