மாணவி கிருசாந்தியின் 27,வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்பட்டது!

You are currently viewing மாணவி கிருசாந்தியின் 27,வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்பட்டது!

யாழ்ப்பாணம் செம்மணியில் சிறீலங்காப் படைகளால் கொன்று புதைக்கப்பட்ட சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி-குமாரசாமியின் 27,வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி வளைவு அருகாமையில் இன்று பிற்பகல் -4-30, மணியளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நினைவு கூறல் நிகழ்வி ல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்-பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜர்-காண்டீபன்,மகளிர் அணித் தலைவி வாசுகி- சுதாகர்,மகளிர் அணிச் செயலாளர் கிருபா-கிரிதரன், உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள்,செயற் பாட்டாளர்களுடன் மக்களும் கலந்துகொண்டு நினைவு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

நினைவுரைகளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா-கஜேந்திரன்,  நடராஜர்-காண்டீபன், வாசுகி -சுதாகர்,மற்றும் மு-ஈழத்தமிழ்மணி ஆகியோர் நிகழ்த்தினர்.

1996,ம் ஆண்டு 09,ம் மாதம் 07,ம் நாள் மாணவி கிருசாந்தி குமாரசாமி மிகக் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரை காணாத நிலையில் குறித்த காவலரணுக்கு அவரைத் தேடிச் சென்ற கிருசாந்தியின் தாயாரும் அவரது உடன் பிறந்த சகோதரரும்,மற்றும் உறவினர் ஒருவரும் என மூவரும் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டு மிகக்கொடூரமாகக் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர்.

மாணவி கிருசாந்தி-குமாரசாமி தனது வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் செம்மணி வீதியூடாகப் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது செம்மணி பகுதியில் காவலரண் அமைத்து நிலை கொண்டிருந்த சிறீலங்கா படைகளால் வழி மறிக்கப்பட்டு குழறக் குழற இழுத்துச் செல்லப்பட்டு காப்பரணுக்குள் வைத்து ஒன்பது வரையான சிங்களப் படைகளால் மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு ஈவிரக்க மின்றிப்
படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அப்போதைய சிங்கள பேரினவாத அரச தலைவியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இப் படுகொலைக்கு

இதுவரை நீதி கிடைக்காத நிலையிலும் யாழ்ப்பாணத்தில் அக்காலப் பகுதியில் சிறீலங்கா படைகளாலும்,ஈ.பி.டி.பி துணை இராணுவ ஒட்டுக்குழுவாலும் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாகக் கொன்று இதே செம்மணி பகுதியில் புதைக்கப்பட்ட 600,ற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்,யுவதிகள் குறித்து இது வரை எந்த விதமான நீதி விசாரணைகளும் முன்னெடுக்கப் படாதுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

 

மாணவி கிருசாந்தியின் 27,வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்பட்டது! 1மாணவி கிருசாந்தியின் 27,வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்பட்டது! 2மாணவி கிருசாந்தியின் 27,வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்பட்டது! 3மாணவி கிருசாந்தியின் 27,வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்பட்டது! 4மாணவி கிருசாந்தியின் 27,வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்பட்டது! 5மாணவி கிருசாந்தியின் 27,வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்பட்டது! 6

 

மாணவி கிருசாந்தியின் 27,வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்பட்டது! 7

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments