மாலைதீவில் குண்டு வெடிப்பு; முன்னாள் ஜனாதிபதி காயம்!

You are currently viewing மாலைதீவில் குண்டு வெடிப்பு; முன்னாள் ஜனாதிபதி காயம்!

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹமட் நஷீத் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைநகர் மாலியில் உள்ள மொஹமட் நஷீத் வீட்டுக்கு முன்பாக அவரது காருக்கு அருகே குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

உடனடியாக மீட்கப்பட்ட அவர் மாலியில் உள்ள ஏ.டி.கே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொஹமட் நஷீத் அவசர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

மொஹமட் நஷீத் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்தவமனைக்கு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் தற்போது சென்றுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments