முதன்முறையாக பொதுவெளியில் தோன்றினார் தலிபான் உயர் தலைவர் அகுந்த்சாதா!

You are currently viewing முதன்முறையாக பொதுவெளியில் தோன்றினார் தலிபான் உயர் தலைவர் அகுந்த்சாதா!

தலிபான் அமைப்பின் உயர் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்சாதா முதல்முறையாக நேற்று சனிக்கிழமை பொது வெளியில் தோன்றி பேசினார்.

ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் அமைந்துள்ள கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் தலிபான் ஆதரவாளர்கள் மத்தியில் அவா் உரையாற்றினார்.

தலிபான் அமைப்பின் உச்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்சாதா 2016ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னரும் இதுவரை அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்துவந்தார்.

இதன் காரணமாக, அவர் இறந்துவிட்டதாகவும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இராணுவத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசுவதற்காக தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவுக்கு உச்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்சாதா சென்றதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரது வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புகைப்படமோ வீடியோவோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், அங்கு எடுக்கப்பட்ட 10 நிமிட வீடியோ தலிபான் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது. அமீருல் மொமினீன் என்றழைக்கப்படும் அகுந்த்சாதா, அங்கு மதம் தொடர்பாகவே பேசியுள்ளார். அரசியல் குறித்து பேசவில்லை.

போரில் உயிரிழந்த, படுகாயம் அடைந்த தலிபான்களுக்காக அகுந்த்சாதா பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு, அமெரிக்க நடத்திய ட்ரோன் தாக்குதலில் அப்போது தலைவராக இருந்த முல்லா அக்கர் மன்சூர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அகுந்த்சாதா தலிபான் இயக்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments