முதுகெலும்பில்லாத கட்டைக்காட்டு பாடசாலை நிர்வாகம்!

You are currently viewing முதுகெலும்பில்லாத கட்டைக்காட்டு பாடசாலை நிர்வாகம்!
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலைக்கு வருகை தந்த மாத்தறை(சிங்கள) மாணவர்கள்
கடந்த 5 ஆம் திகதி பெளத்த தேரர்களுடன் வருகை தந்த இவர்கள் மூன்றாவது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகளை செய்துவருகின்றார்கள்.
இன நல்லிணக்கம் என்ற அடிப்படையில் இவர்கள் வருகை தந்து மாணவர்களுடன் பல்வேறு நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாது இன அழிப்பு இராணுவத்திற்கும் புத்தபிக்குகளுக்கும் மாலை மரியாதை செய்து தமிழ் இனத்தின் வரலாற்றில் கறைபடிந்த வரலாற்றை பதிவு செய்திருக்கின்றார்கள் கட்டைக்காடு பாடசாலை நிர்வாகத்தினர்.
இன்று தமிழ் இனம் திட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் தமிழ் மண் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் புத்தபிக்குகளின் மகாவம்ச சிந்தனையில் பறிக்கப்படும் தமிழ் நிலங்களுக்கு எதிராகவும் நிலத்திலும் புலத்திலும் மக்கள் சர்வதேச நீதி கோரி போராடி வருகின்ற சூழலில் சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பை மறைப்பதற்கான துரோக வேலையில் இறங்கி இருக்கும் கட்டைக்காட்டு பாடசாலை நிர்வாகத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அரச பதவிகளில் இருந்து நக்கிப்பிழைக்கும் வேலைகளுக்காக ஒரு இனத்திற்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை நல்லண்ணம் என்ற அடிப்படையில் மூடி மறைக்க முயல்வதை மானத்தமிழ் இனம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை இப்படியான இழிநிலையை அருவருப்போடுதான் பார்க்கின்றோம்.

கொத்துக்கொத்தாக தமிழீனம் அழிக்கப்பட்ட மக்களின் இரத்தவாடையும் ஓலங்களும் ஓயாமல் இன்னும் வடுக்களோடும் வலிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனங்களில் மேலும் காயங்களை ஏற்படுத்தும் அடிவருடி அரசியலை தமிழ் நிலங்களில் நடத்தாதீர்கள் ஏனெனில் இந்த மண் வலிகளையும் காயங்கங்களையும் சுமந்தபோதும் உறவுகளை இழந்தபோதும் மானமிழக்காது போராடியது.
அந்த மானமாவீரர்களின் வீரம் வீசும் காற்றில் இப்படியான அசுத்தங்களை கலக்காதீர்கள் அது ஒருநாள் உங்கள் சுவாசத்தில் தூய்மை அற்ற காற்றை விதைக்கும்.

முதுகெலும்பில்லாத கட்டைக்காட்டு பாடசாலை நிர்வாகம்! 1

முதுகெலும்பில்லாத கட்டைக்காட்டு பாடசாலை நிர்வாகம்! 2

அன்பான புலம்பெயர் கட்டைக்காடு மக்களே இப்படியான இழிய செயலை கண்டியுங்கள் இது உங்கள் ஊருக்கே இழுக்கு இந்த பாவத்தை கழுவ முடியாது காலம் காலமாக உங்கள் சந்ததிகளின் காலை சுற்றிநிற்கும்.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments