முல்லைத்தீவு விவசாயிகளின் பிரச்சினையை நேரில் பார்வையிட்டார் நாடாளுமன்ற உறுப்பினர்- செ. கஜேந்திரன்

You are currently viewing முல்லைத்தீவு விவசாயிகளின் பிரச்சினையை நேரில் பார்வையிட்டார் நாடாளுமன்ற உறுப்பினர்- செ. கஜேந்திரன்

முல்லைத்தீவின் எல்லை கிராம விவசாயிகளின் நிலை பிரச்சினையை நேரில் பார்வையிட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன்

கொக்குத்தொடுவாய் விவசாயிகளின் நிலம் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் பார்வையிட்டு சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத் தின் கொக்குத் தொடுவாய் பகுதியில் வசிக்கும் மக்களின் பூர்வீக விவசாய காணிகளில் விவசாயச் செய்கையினை மேற்கொள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் படையினர் வனவள திணைக்களத்தினர்​ மகாவலி அபிவிருத்தி அதிகார சபை இந்த விவசாயிகளுக்கு தடை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்

கடந்த காலங்களில் விவசாயம் செய்தும் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளில் நெற் செய்கை செய்ய பண்ண முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் இந்த கிராம மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்

கால போக நெற் செய்கைக்காக விவசாய நிலத்தை பண்படுத்த முயன்ற வேளை படையினர் தடை ஏற்படுத்தியுள்ளதுடன் வனவள திணைக்களத்தினர் விவசாய நிலங்களுக்குள் செல்ல விடாமல் தடை செய்துள்ளார்கள்.

வடக்கு கிழக்கின் எல்லைக் கிராமமான கொக்குத்தொடுவாய் கிராம மக்களின் இந்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் விவசாயிகளிடம் அது தொடர்பான ஆதாரங்களை திரட்டி உள்ளார் எதிர்வரும் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எடுத்துரைக்க உள்ளதாக இதன்போது அவர் தெரிவித்துள்ளார்

பகிர்ந்துகொள்ள