முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (26) மாலை முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திர நிக்கசீல (47வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பாண்டியன் குளம், செல்வபுரம் பகுதியை சேர்ந்த விமல் விக்னேஷ் (28 வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் வெகோ ரக மோட்டார் சைக்கிள் மற்றும் நெல் வெட்டும் இயந்திரம் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தில் மோதி இடம்பெற்றுள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டதுன் மேலதிக விசாரணைகள் பாண்டியன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்ன நாயக தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.