முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு புலிபாய்ந்த கல் கடல் கரை பகுதியில் வாடியமைத்து தொழில் செய்யும் நோக்கில் நேற்று (09.08.2023) புதன்கிழமை 04,படகுகளில் அனுமதியின்றி வந்த 18,சிங்கள மீனவர்கள் அப்பகுதி மீனவர்களாலும், கிராமட்டகடற் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
எந்த வித அனுமதி ஆவணங்களும் இன்றி வாடிஅமைத்த சிங்கள மீனவர்கள் தொடர்பில் பிரதேச மீனவர்களால் கடற்தொழில் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர் துரைராஜா ரவிகரன்ஆகியோருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து உடனடியாக அங்கு சென்ற அவர்கள் குறித்த சிங்கள மீனவர்களிடம் அனுமதி ஆவணங்களைக் கோரியுள்ளனர்.
எனினும் கிராமஅலுவலரிடமோ பிரதேச செயலாளரிடமோ உரிய அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்து கிராம அலுவலரால் வாடி அமைக்க விடாது தடுக்கப் பட்டுள்ளனர்.
நாயாறு பகுதியை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றத்தை நிறுவ சிங்கள பேரினவாதம் முயன்று வருகின்றமை பற்றிய செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளமை கவனத்தில் கொள்ளத் தக்கது.