முல்லைத்தீவு நீதிமன்று நீதவான் ரி-சரவணராஜா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு -கிழக்கைச் சேர்ந்த சட்டத்தரணிகளால் நாளை – (03.10.2023) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற முன்றலில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் படவுள்ளது.
இதில் வடக்கு கிழக்கின் “எட்டு’ மாவட்டங்களிலும் உள்ள சட்டத்தரணிகள் சங்கங்களினதும் சட்டத்தரணிகள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.