முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரை அமைப்பிற்கு நீதிமன்ற தீர்ப்பை மீறிய தொல்லியல் திணைக்களம் !

You are currently viewing முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரை அமைப்பிற்கு  நீதிமன்ற தீர்ப்பை மீறிய தொல்லியல் திணைக்களம் !

முல்லைத்தீவு ,குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் மூன்று முறை நீதிமன்றக் கட்டளையை மீறி புதிதாக விகாரை ஒன்றை அமைப்பதற்கு உடந்தையாகச் செயற்பட்டார் என நீதிமன்றில் கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் மலை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய நாள் (31.08.2023) வியாழக்கிழமை
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இன்றைய வழக்கின் தீர்ப்பின் மூலம் இவ்விடயம் நீதவானால் வெளிப்படுத்தப் பட்டு கட்டளையாக்கப் பட்டுள்ளது.

இன்றைய வழக்கின் போதும் தமிழ் மக்களின் மத வழிபாட்டுரிமை மறுப்பிற்கு எதிராக நீதிமன்றில் வாதிட்டு வரும் மூத்த சட்டத்தரணி ரட்ணவேல், சட்டத்தரணி தனஞ்சயன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில்  முன்னிலையாகியிருந்தனர்.

அத்தோடு இந்த வழக்கு குறித்த நீதிமன்ற அறிவிப்பை பார்வை யிடுவதற்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் -பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன்,ஆகியோர் அங்கு சமூகமளித்திருந்தனர்.

அவர்களுடன் முல்லைத்தீவு மாவட்ட முக்கிய அரசியல் செயற்பாட்டாளர் களான துரைராஜா-ரவிகரன்,பீற்றர்-இளஞ் செழியன்,மற்றும் கந்தையா-சிவநேசன்,ஆகியோர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் தமிழ் உணர்வாளர்கள் பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.

 

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments