மேச்சல் தறைக்கு நீதிகோரி நாடாளுமன்றில் போராட்டம்!

You are currently viewing மேச்சல் தறைக்கு நீதிகோரி நாடாளுமன்றில் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களான மயிலந்தமடு மற்றும் மாதவனை கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்ப் பண்ணையாளர்களின் கால்நடைகளின் மேச்சல் தறைகளை இனவாத நோக்கோடும் நில ஆக்கிரமிப்பின் மூலமும் அடாத்தாக ஆக்கிரமித்து

அங்கிருந்த பூர்வீக தமிழ்ப் பண்ணையாளர்கள் விரட்டப்பட்டு,அவர்களது கால்நடைகள் சுடப்பட்டும், வெட்டியும் அடித்தும் கொல்லப்பட்டும்,களவாடப்பட்டும் வரும் நிலையிலும்

அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்ட மேச்சல்த்தறைகள் அழிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப் படும் நிலையிலும்

பூர்வீக மேச்சல்தறைகளும்  பெரும்பாலான தமிழ்ப் பண்ணையாளர்களின் பல ஆயிரக்கணக்கான கால் நடைகளின் மேச்சல் தறையாகவும், கால் நடைகள் மூலம் கிடைத்த வருமானத்தில் அம் மக்களின் அண்றாட வாழ்க்கைச்செலவைக் கொண்டு செல்ல உறுதுணையாக அமைந்த மேச்சல் தறையை அடாத்தாக ஆக்கிரமித்துள்ள சிங்களவர்களை அங்கிருந்து வெளியேற்றக் கோரியும்,

தமது கால்நடைகளின் மேச்சல் தறையை மீட்டுத்தரக்கோரியும்,

மயிலந்தமடு மற்றும் மாதவணை பண்ணையாளர்களால் தொடர்ச்சியாக இரவு பகலாக சித்தாண்டி வீதியோரம் கொட்டகை அமைத்து அமைதி வழியிலான போராட்டம்  கடும் பனி ,மழை, வெய்யிலுக்கும் ,பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அப்போராட்டம் இன்று (06.10.2023)  வெள்ளிக்கிழமை 22,வது நாளாகவும்  தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்
அரசாலோ, மாவட்டத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர்களாலோ,அரச உயர் அதிகாரிகளாலோ இதற்கான தீர்வு வழங்கப்படாத நிலையில்

பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கான நீதிகேட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்- சாணக்கியன்,அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா-கலையரசன், வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்,  யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் -சிறிதரன், ஆகியோர் சபைக்கு முன்பாக சுலோகங்களை ஏந்தியவாறு எழுந்து சென்று கோசங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நியாயங்கோரிய இப் போராட்டத்தை எதிர்த்து இனவாத கருத்துக்களைத் தெரிவித்தவாறு சில சிங்கள அமைச்சர்களும், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஆழும் தரப்பின் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை- சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் கையை கால் பொக்கற்றுள் வைத்து ஆழும் அரச தரப்பில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமையை காணொளி ஊடாகக் காணக்கூடியதாக இருந்தது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply