மேலும் 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகை!

You are currently viewing மேலும் 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகை!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்வெட்டு போன்ற பல்வேறு பிரச்சனைகளை அங்குள்ள மக்கள் தினமும் சந்தித்து வருகின்றனர். இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் நிலவுவதால், அங்குள்ள மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 3 குடும்பத்தை சேர்ந்த 13 பேர் படகின் மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அவர்களை விசாரித்த க்யூ பிரிவு காவல்த்துறையினர் விசாரித்து வந்த நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேலும் 5 பேர் ராமேஸ்வரம் அருகில் உள்ள சேராங்கோட்டை பகுதிக்கு படகு மூலம் வந்துள்ளனர்.

ஒரே நாளில் 5 குடும்பத்தை சேர்ந்த 18 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ள நிலையில், அவர்களிடம் காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் வந்துள்ள அவர்கள் கூறும்போது, இலங்கையில் வாழ முடியாத சூழல் நிலவுவதாகவும், அதனால் தமிழகம் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் பலர் அங்கிருந்து வர உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து இதுவரை 47 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments