யாழ்ப்பாணம் சிறீலங்கா பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 3 நாளில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் போதை மாத்திரை, ஹெரோயின், மாவா என்பனவற்றுடன் ஆறு சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்தி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த சிறீலங்கா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை
நேற்று யாழ். மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறீலங்கா பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (30.10.2025) மாலை யாழ்ப்பாணம் சிறீலங்கா பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 24, 25 வயதுகளையுடைய நான்கு இளைஞர்கள் யாழ். மணியந்தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவரிடமிருந்து 2 கிராம் 540 மில்லி கிராம் கெரோயின் சிறீலங்கா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.





