யாழ்ப்பாணத்தில் சிசுவும் இளம் தாயும் அடுத்தடுத்து மரணம்!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் சிசுவும் இளம் தாயும் அடுத்தடுத்து மரணம்!

யாழ்ப்பாணத்தில் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தார். அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 24ஆம் திகதி வீடு திருப்பியுள்ளார்.

பின்னர் இவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை இரண்டு மணித்தியாலங்களில் உயிரிழந்தது.

இந்நிலையில் குறித்த பெண் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments