யாழ். கலாசார நிலையத்தை மத்திய அரசு சுவீகரிக்க முயற்சி!

You are currently viewing யாழ். கலாசார நிலையத்தை மத்திய அரசு சுவீகரிக்க முயற்சி!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ். நகர மத்தியில் அமைக்கப்பட்டு வரும் கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாநகர சபையின் ஆளுகைப் பகுதியில், மாநகர சபையின் பராமரிப்பில் மாநகர சபையின் நிர்வாக அலகின் கீழ் யாழ். மாநகர சபைக்கு உரித்தானதாக கட்டப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது மத்திய அரசாங்கத்தில் இருந்து ஒரு கோரிக்கை வருகின்றது, இதனை பராமரிப்பதற்கு யாழ். மாநகர சபையால் முடியாது என்றும் அதற்கான ஆளுமை மற்றும் நிதி வளம் மாநகர சபையில் இல்லை என்றும், அதன் பிரகாரம் அதனை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறியிருக்கின்றார்.

அவருடைய கருத்து ஏற்புடையது அல்ல, எங்களுடைய ஆளுகைக்குட்பட்ட அதிகாரங்களை, நாங்கள் நிர்வகிக்கக் கூடிய சொத்துக்களை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பது அல்லது ஆளுகையை அனுமதிப்பது என்பது எதிர்காலத்தில் எங்களுடைய இருப்பை கேள்விக்குறியாக்கும் விடயமாக அமையும்.

அந்தவகையிலே இந்த விடயமானது கண்டிக்கத்தக்கது. இதனை ஆரம்பத்திலேயே இல்லாது செய்ய வேண்டும். எதற்காகவும் மத்திய அரசாங்கத்திற்கு ஒப்படைக்க முடியாது, ஒப்படைக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள