யாழ் சங்கானையில் தலைவிரித்தாடும் போதைப்பாவனை , பாலியல் சீண்டல்கள்!

You are currently viewing யாழ் சங்கானையில் தலைவிரித்தாடும் போதைப்பாவனை , பாலியல் சீண்டல்கள்!

யாழ்.சங்கானை நகரினை அண்மித்த பகுதிகளில் போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு கழிவுக் காவாலிகள் பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது மோசமாக அதிகரித்துள்ளது.

சங்கானை சிவப்பிரகாசம் மகாவித்தியாலத்திற்கு அருகில் அருகிலுள்ள மதகில் தினமும் போதப்பொருள் பயன்படுத்திவிட்டு ஒன்றுகூடும் காவாலிகள் வீதியை மறித்து நின்று மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பதால் பாடசாலைகளுக்கும் அருகிலுள்ள இரு கல்விநிலையங்களுக்கும் செல்லும் மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அத்துடன் சங்கானை நகரின் மல்லாகம் சந்தியின் முதலாம் ஒழுங்கையிலும் மல்லாகம் வீதியிலுள்ள பசாஜ் சேவிஸ் நிலைய சந்தி மற்றும் அருகிலுள்ள ஒழுங்கைகளிலும் கஞ்சா வெறியில் கூடிநிற்கும் காவாலிகள் மாணவிகள் இளம்பெண்களின் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துவருகின்றனர். இச்சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்களில் பலர் பாடசாலை செல்லாத 18 வயதிற்கு குறைந்த பதின்ம வயதுக் காவாலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

ட தமிழீழத்தில் மருத்துவத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை உயிர்கொல்லி போதைப்பொருளாகப் பயன்படுத்தும் கலாசாரம் வேரூன்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள  பேரினவாத  அரசின்  இராணுவ படை தரப்பினரே இவ்வாறான செயற்பாட்டுக்கு முன்னோடியாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

வடக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிர்கொல்லி போதை மாத்திரைகளுடன் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைவசம் வைத்திருந்த மாத்திரைகள், மருத்துவத் தேவைக்கு வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் அவற்றை உயிர்கொல்லி போதை மாத்திரையாக பலர் பயன்படுத்தினர்.

கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அபாயகர ஒளடதங்கள் சட்டத்தின் ஊடாக அத்தகைய வலி நிவாரணிகள் ஆபத்தான உயிர்கொல்லி போதைப்பொருள்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை மருந்தகங்களில் விற்பனை செய்யவும் முடியாது.

இந்தநிலையில் அவற்றுக்குப் பதிலாக மனநோய்க்கு நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் மருந்தை, போதைப்பொருளாக சிலர் உபயோகித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

படையினரே ஆரம்பத்தில் இதனை மருந்தகங்களிலிருந்து அதிகளவு கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

தற்போது  பல  தமிழ் இளைஞர்கள் இந்த மருந்தை உயிர்கொல்லி போதைப்பொருளாகப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply