தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் மக்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் (07.08.2023) இன்று பிற்பகல் நடைபெற்ற இச் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ்.வடமராட்சியில் முன்னணியினர் மக்கள் சந்திப்பு.
