யாழ். விமான நிலையத்­திற்கு 300 மில்­லியன் ரூபாய் நன்கொடை!

  • Post author:
You are currently viewing யாழ். விமான நிலையத்­திற்கு 300 மில்­லியன் ரூபாய் நன்கொடை!

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலை­யத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக இந்­திய அர­சாங்கம் உறுதி அளித்­துள்­ளது.

கைத்­தொழில் ஏற்­று­மதி, முத­லீட்டு ஊக்­கு­விப்பு, சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அமைச்சர் பிர­சன்ன ரண­துங்க, அண்­மையில் இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்­து­வுடன் நடத்­திய சந்­திப்பின் போதே இந்த உறு­தி­மொழி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தச் சந்­திப்பு தொடர்­பாக கருத்து வெளி­யிட்­டுள்ள அமைச்சர் பிர­சன்ன ரண­துங்க,

“பய­ணிகளுக்­கான வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் பொதி­களை நகர்த்தும் பட்­டியை அமைப்­ப­தற்கும் இந்­தியா 300 மில்­லியன் ரூபா கொடையை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது.

பிராந்­திய விமானப் போக்­கு­வ­ரத்­துக்­காக யாழ்ப்­பாணம் விமான நிலை­யத்தை முன்­னைய அர­சாங்கம் அவ­ச­ர­மாக திறந்த போதும்,  அது சரி­யான முறையில் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அங்கு விமா­னங்­க­ளுக்கு வழி­காட்டும், கட்­டுப்­ப­டுத்தும், தரை­யி­றங்கும் கரு­விகள் கூட இல்லை. எனவே, பிராந்­திய விமா­னங்­களை இயக்­கு­வ­தற்­கான வச­தி­களை நாங்கள் மேம்­ப­டுத்த வேண்டும்.

இந்­திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து விடுத்த வேண்­டு­கோளின் பேரில், நாட்டை விட்டு வெளி­யேறும் பயணிகளுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதற்கான சாத்தியங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள