ரஷ்யாவில் கொரோனா ; தீவிரமடையும் பாதிப்பு, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்!

  • Post author:
You are currently viewing ரஷ்யாவில் கொரோனா ; தீவிரமடையும் பாதிப்பு, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்!

தற்போது ரஷியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதன்படி அந்த நாட்டில் இதுவரை 134,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்துள்ளது, குணமடைந்தோர் எண்ணிக்கை 16,639 ஆக உயர்ந்துள்ளது. (worldometers)

இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரஷ்யாவில் ஐந்தாவது வாரமாக பொதுமுடக்கம் நீடிப்பதால், தலைநகர் மாஸ்கோ ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்திருப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் தீவிர பொது முடக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். இதன் காரணமாக தலைநகர் மாஸ்கோவில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது கொரோனா குறித்த அச்சம் ரஷ்ய மக்களிடையே அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாஸ்கோவில் வைரஸ் பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வீடுகளை விட்டு வாகனங்களில் வருபவர்களையும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து, அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதித்து வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரஷியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ம் திகதி வரை அமுலில் இருப்பது நினைவுகூறத்தக்கது.

பகிர்ந்துகொள்ள