இன்று உலக சிரிப்புநாள் : மே மாத முதல் ஞாயிறு கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள்!

  • Post author:
You are currently viewing இன்று உலக சிரிப்புநாள் : மே மாத முதல் ஞாயிறு கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள்!

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள் எமது மூதாதையர். சிரிப்பு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். இன்றைய சூழலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க எமக்கு சிரிப்பு மிகவும் அவசியமாகின்றது.

வாழ்கையில் நிம்மதியாக இருந்தால்தான் சிரிக்க வேண்டுமா என்ன!, துன்பத்திலும் சிரித்தால் அதைவிடப் மகிழ்ச்சியான மனிதன் இந்த உலகில் இருக்க முடியுமா? ஆம், சிரியுங்கள் எந்த பிரச்னை வந்தாலும் உடனே அதை மகிழ்ச்சியானதாக மாற்றி சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கடந்து போங்கள். பிரச்னைகள் தானாக நிவர்த்தியாகிவிடும். இதனால் உடலளவிலும் ஆரோக்கியம் பெறுவீர்கள்.

  • இயற்கையான வலி நிவாரணி :
    நாம் சிரிக்கும்போது உடலில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எண்டோர்ஃபின் (Endorphin) அமிலம் சுரக்கிறது. இது உடலை அமைதியடையச் செய்து உற்சாகமாக வைத்துக் கொள்கிறது. இதனால் எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியான மனிதராகவே தோன்றுவீர்கள். உடல் வலி, நோய் என எதுவானாலும் மனம் விட்டுச் சிரிப்பதால் எல்லாம் பறந்து போகும். மருத்துவமனையிலும் நோயாளியை குணப்படுத்த சிரிப்பையே முக்கிய மூலக்கூறாகப் பயன்படுத்துகின்றனர்.
  • மனக் கவலை நீங்கும் :
    நீங்கள் மனக் கவலையில் இருக்கிறீர்களானால் உங்களுக்கு அதை மறக்கடிக்க நிச்சயம் மகிழ்ச்சியான சூழல் அவசியம். ஏனெனில் நீங்கள் மனக் கவலை யில் இருக்கும்போது கார்டிசோல் (cortisol) எனப்படும் அமிலம் சுரக்கிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது இதயப் பிரச்னைகள் வரும். இதைத் தவிர்க்க நீங்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள். இதனால் கார்டிசோலின் (cortisol) அளவு 69 சதவீதம் குறைவதாக ஒரு ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இனி கவலையை மறந்து மன கவலையை துரத்தி அடிக்க வாய்விட்டுச் சிரிங்கள்.
  • மன அழுத்தம் நீங்கும் :
    ஆராய்ச்சியில், சிரிப்பதால் உங்கள் மூளையின் செயல்திறன் அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அந்த ஆராய்ச்சியில் எப்போதும் மன அழுத்தத்திலேயே இருக்கும் அவர்கள் நகைச்சுவை என்பதையே மறந்திருந்தனர். அவர்களுக்கு முற்றிலும் சிரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு மகிழ்ச்சியான சூழலில் வைத்திருந்ததில் அவர்களின் மன அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிந்துள்ளனர். நாம் சிரிக்கும் போது பெருமூளைப் புறணி (cerebral cortex) முழுவதும் அதன் தாக்கம் எதிரொலித்து ஆற்றலை ஏற்படுத்துகிறது. சிரிப்பு என்பது மன அழுத்தம் மட்டுமன்றி மனக் கவலை, மனச் சோர்வு போன்றவற்றையும் குறைத்து நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகை செய்கின்றது.
  • இதயப் பிரச்னைகள் வராது :
    சிரிக்கும் போது உள்ளிழுத்துவிடும் மூச்சால் இரத்தத்தில் பிராணவாயு ஏற்றம் நிகழ்கின்றது. இதனால் இரத்த ஓட்டம் இதயத்திற்கு சீராகப் பாய்ந்து அதன் செயல்பாடுகளும் சிறப்பாகிறது.
  • இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் :
    சிரிக்கும்போது இதயத்தின் ஆற்றலும் சீராகிறது. இதனால் இரத்த ஓட்டமும் அதிகரித்து இரத்த அழுத்தப் பிரச்னையை சரி செய்கிறது. இரத்த தசை நாளங்களையும் திறம்பட செயலாற்றச் செய்கிறது.
  • நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் :
    சிரிப்பதால் பீடா எண்டோர்ஃபின்ஸ் (Beta-Endorphins) மற்றும் இதர ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை டி- செல் (T-cells) உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் லிம்ஃபோசைட்ஸ் (lymphocytes) உருவாகி அதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
பகிர்ந்துகொள்ள