ரஷ்ய ஜெனரல் செர்ஜி சுரோவிகின் கைது செய்யப்பட்டதாக மாஸ்கோ டைம்ஸின் ரஷ்ய சேவை தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளுக்கு 2022 அக்டோபர் மற்றும் 2023 ஜனவரிக்கு இடையில் மூன்று மாதங்களுக்கு செர்ஜி சுரோவிகின் தலைமை தாங்கினார்.
பின்னர் அவருக்கு பதிலாக பொதுப் பணியாளர்களின் தலைவர் வலேரி ஜெராசிவோவ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் செர்ஜி சுரோவிகின் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரிகோஷின் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தொடங்கியது முதல் பொதுவெளியில் சுரோவிகின் காணப்படவில்லை. ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் ஒரு ஆதாரம் கூறும்போது, அவரோட நிலைமை சரி இல்லை.
அதிகாரிகளுக்கு, நான் மேலும் எதுவும் கூற முடியாது என தெரிவித்துள்ளது. ரோமனோவ் தரப்பில் கூறும்போது சுரோவிகின் இப்போது மாஸ்கோவின் லெஃபோர்டோவோ தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.