ராஜதந்திர உறவுகள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சீனாவுக்கு சுற்றுப்பயணம்!

You are currently viewing ராஜதந்திர உறவுகள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சீனாவுக்கு சுற்றுப்பயணம்!

மத்திய கிழக்கில் மோதல் பரவுவதை தடுப்பதில் சீனா பங்கு வகிக்க முடியும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்வேறு ராஜதந்திர உறவுகள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் சீனாவுடனான தனது தொடர்பை பிளிங்கன் சுட்டிக்காட்டினார், அதில் அக்டோபர் 7ம் திகதிக்கு பிறகு சீன அதிகாரிகளுடன் 6 முறை பேசியுள்ளேன் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மத்திய கிழக்கில் மோதல் பரவுவதை தடுப்பதில் சீனாவில் மிகப்பெரிய பங்கினை செய்ய முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவின் திறனை முன்னிலைப்படுத்தி பேசிய பிளிங்கன். “ஈரான் போன்ற பிராந்தியத்தின் முக்கிய நாடுகளுடன் சீனாவுக்கு செல்வாக்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.

“இந்த செல்வாக்கை பயனுள்ள வகையில் பயன்படுத்த அவர்களை நான் வலியுறுத்தினேன்.” என கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய கிழக்கில் இருந்து கிடைக்கும் எரிசக்தியை நம்பியிருப்பதால், சீனாவுக்கு நிலைத்தன்மையில் ஆர்வம் இருப்பதாக பிளிங்கன் நம்புகிறார்.

“மோதல் சீனாவிற்கு பலன் தராது,” என்று அவர் கூறினார். மேலும் இதற்கு அவர்கள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments