காவல்துறை அனுசுயாவின் வக்கிரமே இந்திய படைகளிடமும் இருந்தது!

You are currently viewing காவல்துறை அனுசுயாவின் வக்கிரமே இந்திய படைகளிடமும் இருந்தது!

யாரோ யாருக்கோ நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் ராசீவ் காந்தி செத்தொழிந்தார் கூடவே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். காங்கிரசின் எந்த முக்கிய தலைவரும் அந்த இடத்தில் இல்லை. கொல்லப்படவும் இல்லை

இன்று பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு மனிதநேயமே இல்லாது போராடும் செம்மறிகள் இதனை புரிந்து கொள்ளவேண்டும் அத்தோடு ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அருகில் இருந்து படுகாயம் அடைந்ததாக தன்னை அடையாளப்படுத்தி கருத்துக்களை வக்கிரமாக ஊடகங்களுக்கு தெரிவிக்கும் முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயாவும் புரிந்துகொள்ளவேண்டும்.

சரி கங்கிரஸ்காரரும் அதன் ஒட்டுண்ணிகளும் கூறுவதுபோன்றுய ஈழத்தமிழர்கள்தான் கொன்றார்கள் என்று ஒரு கதைக்கு வைத்துக்கொண்டாலும் எங்களைப்பொறுத்தவரையில் நியாயமான நீதிக்கொலையாகவே பார்க்கமுடிகின்றது.

ஏனெனில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை படுகொலைசெய்து அங்கவீனர்களாக்கி எமது பெண்களை மிக மோசமாக கூட்டுப் பாலியல் வன்முறையை செய்த இந்தியப்படைகளுக்கு கட்டளையிட்ட கதாநாயகன் அவர்தான் எனவே அவருக்கு என்ன தண்டனை வழங்கவேண்டுமோ அதை யாரோ வழங்கியது பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு மகிழ்சிதான்.

காவல்துறை அதிகாரி அனுசுயா போன்ற பெண் அதிகாரியால் எவ்வாறு தமிழ்மக்கள் மீது நிகழ்தப்பட்ட இனவழிப்பை மகிழ்சியாக பேசமுடிகின்றதோ அவ்வாறே இந்திய இராணுவம் எமது தமிழ்மக்களை படுகொலை செய்வதில் மகிழ்ச்சியாக செயற்பட்டது.

இந்த வக்கிரமான புத்திதான் இந்திய காங்கிரசிடமும் தாரளமாக இருக்கின்றது அதனால்த்தான் 2009 வரை நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு இந்தியா சிறீலங்காவின் முதுகெலும்பாக தொழிற்பட்டது.

இப்படிப்பட்ட பின்னணியின் முன்னணி ஆட்ட நாயகனாக இருந்த ராஜீவ் செய்த கொடிய செயல்கள் சிலவற்றை பட்டியலிடுகின்றோம் பாருங்கள்

1987-1989 ஈழத்திற்கு அமைதிப்படை அனுப்பி 17000 தமிழர்களை கொன்றும் பல தமிழ் பெண்களை கூட்டு வன்புணர்வு செய்து கொன்றும் இனப்படுகொலையை தமிழீழ மண்ணில் முதலில் தொடங்கியது.

1984 சீக்கிய இனத்தோர் 2000 கொல்லப்பட்டது.

1984 போபால் விசவாயு தாக்கி கொல்லப்பட்டோரின் குற்றவாளிகளை தப்பிக்க வைத்து நியதியை குழிதோண்டி புதைத்தது.

1985 இந்திய முஸ்லிம்களை பாதுக்காத்து வந்த சிறப்பு சட்டத்தை தடைசெய்து கலவரங்களுக்கு காரணமாக இருத்தது.

1987 போர்ப்ஸ் ஊழல்

1990 காஷ்மீரகத்தின் இறையாண்மையை சின்னபின்னமாக்கியது.

இன்னும் ஏராளம்..

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments