லெப்.கேணல் இம்ரான் உட்பட ஏனைய, இன்றைய விடுதலைதீபங்கள்!!

You are currently viewing லெப்.கேணல் இம்ரான் உட்பட ஏனைய,  இன்றைய விடுதலைதீபங்கள்!!

லெப்.கேணல் இம்ரான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

லெப்.கேணல் இம்ரான் உட்பட ஏனைய, இன்றைய விடுதலைதீபங்கள்!! 1

யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ்.மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 
சூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் இம்ரான்–பாண்டியன்.

விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர்.

இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள்.

லெப்.கேணல் இம்ரான் உட்பட ஏனைய, இன்றைய விடுதலைதீபங்கள்!! 2

அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.

எங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறீலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப்பட்டது.

சுன்னாகத்திலிருந்த சிறீலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர்.

சிறீலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர்.

இம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார்.

லெப்.கேணல் இம்ரான் உட்பட ஏனைய, இன்றைய விடுதலைதீபங்கள்!! 3

அந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.

கால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார்.

அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார்.

அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார்.

இம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

தலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள்.

அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர்.

இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.

அந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார்.
 
பாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

அதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார்.

இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.

அவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.

கட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகின்ற மாவீரர்களான “இம்ரான்–பாண்டியன்” பெயரை அவர் சூட்டினார்.

அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்தகளங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.

இந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது.

                                                     {+}{+}{+}{+}{+}{+}{+}{+}

தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

லெப்.கேணல் இம்ரான் உட்பட ஏனைய, இன்றைய விடுதலைதீபங்கள்!! 4

2ம் லெப்டினன்ட் குணாளன்
அன்னலிங்கம் அஜேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.03.2008

2ம் லெப்டினன்ட் திருவெழில்
பாக்கியநாதன் கொலின்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.03.2008

கப்டன் வேலரசி
மகாலிங்கம் வசந்தகுமாரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.03.2008

லெப்டினன்ட் அகமகன்
யோகேஸ்வரன் ரமேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.2008

லெப்டினன்ட் இன்பத்தென்றல்
குருகுலராஜா கஜீவன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.03.2008

லெப்டினன்ட் இன்பநேசன்
கந்தசாமி சிவகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.03.2008

லெப்டினன்ட் கவி
தியாகராசா அருள்சிவம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.03.2008

வீரவேங்கை புகழ்முல்லை
தங்கராசா சரண்ராஜ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.03.2008

லெப்டினன்ட் பிரியன்
நாகலிங்கம் நகுலேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.03.2007

கப்டன் தேன்மொழி
வன்னியசிங்கம் தயாநிதி
குப்பிளான், ஏழாலை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.2000

கப்டன் மலையரசன் (காளி)
அலெக்சாண்டர் டெமினியன்நவராஜா
பெரியகுஞ்சுக்குளம், மடு, மன்னார்
வீரச்சாவு: 03.03.2000

2ம் லெப்டினன்ட் குறிஞ்சிநசீலன்
நல்லையா கேதீஸ்வரன்
ஒதியமலை, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 03.03.2000

லெப்டினன்ட் கன்னிமாறன்
சரவணமுத்து விஜயகுமார்
சங்கானை கிழக்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.2000

வீரவேங்கை முடியழகி
றிச்சேட் அமலதாஸ் ஜீவசுலோசனா
வண்ணாங்கேணி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1999

வீரவேங்கை நாமளா
ஏனோக் மெற்றில்டா
வலைப்பாடு, வேரவில், கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.03.1999

வீரவேங்கை கலா
சின்னத்தம்பி அன்னமலர்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 03.03.1999

கப்டன் தமிழ்மணி
நாகரட்ணம் ரமேஸ்
2ம் குறிச்சி, கல்முனை, பாண்டிருப்பு, அம்பாறை
வீரச்சாவு: 03.03.1999

மேஜர் நளன் (தினேஸ்)
சின்னத்தம்பி ஜெயராஜ்
5ம் வட்டாரம், ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.03.1996

காவல்துறை மாவீரர் சிவகுமார்
பேரம்பலம் சிவகுமார்
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1996

காவல்துறை மாவீரர் சிவதீபன்
குலசிங்கம் சிவதீபன்
திக்கம், அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1996

காவல்துறை மாவீரர் காண்டீபன்
சண்முகசுந்தரம் காண்டீபன்
பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.03.1996

மேஜர் சதாத் (வீமன்)
அமிர்தநாதன் அருளப்பு
அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 03.03.1992

வீரவேங்கை மலையான்
வேதநாயகம் அன்ரனி யேசுதாசன்
ஊறணி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1991

மேஜர் அரி
காத்தலிங்கம் பிறேமசிறி
வத்திராயன் வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.03.1989

லெப்டினன்ட் மணியம்
கந்தையா மணிவண்ணன்
நவாலி கிழக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.03.1989

2ம் லெப்டினன்ட் கஸ்ரோ
கணேசன் சந்திரமோகன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 03.03.1989

வீரவேங்கை ஜஸ்ரின் (சேவியர்)
தில்லையம்பலம் பற்குணராசா
செட்டிகுளம், வவுனியா.
வீரச்சாவு: 03.03.1989

லெப்டினன்ட் சூரியகுமார்
இரங்கசாமி துளசிதாஸ்
கொண்டக்கட்டை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.03.1988

கப்டன் அனஸ் (ராஜன்)
நடராசா பிறேமானந்தன்
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.03.1988

லெப்டினன்ட் குணசீலன்
இரத்தினம் முருகதாஸ்
வள்ளித்தோட்டம், தம்பசிட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.03.1988

வீரவேங்கை கௌசிகன்
கனகசபை பிரேம்குமார்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 03.03.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

பகிர்ந்துகொள்ள