யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கோரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 249 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 15 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலையில் நால்வருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் வெளிநோயாளர் பிரிவிலும் இருவர் நோயாளர் விடுதியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் நேற்று கோரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவருடன் நேரடித் தொடர்புள்ளவர்கள்.
தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி இருவருக்கும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கும் என மூவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் கோரோனா தொற்றாளருடன் நேரத்தொடர்புடையவர் என சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற மூவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.