யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தவறான முடிவெடுத்த நிலையில் யுவதி ஒருவரின் சடலம் நேற்று (31.10.2025) காலை மீட்கப்பட்டுள்ளது.
கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த 27 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.






