வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு!

You are currently viewing வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு!

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டம் , வடமராட்சி கிழக்கில் 22.11.2026 அன்று எழுச்சியோடு நடைபெற்றது. மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டனர். முதன்மைச் சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தையார் ஏற்றிவைக்க, தொடர்ந்து மலர்மாலையினை மூன்று மாவீரரின் தந்தையார்  அணிவித்தார். மலர் வணக்கத்தினை மூன்று மாவீர்களின் சகோதரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் கண்ணீர் மல்க சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். முதல்நிகழ்வாக, வரவேற்புரையும் அடுத்து சிறப்புரைகளும் இடம்பெற்றன.

அருட்தந்தை வசந்தன் அடிகளாரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைபரப்புச் செயலாளர் திரு.நடராஜா காண்டீபன் அவர்களும் சட்டத்தரணி மகிந்தன் அவர்களும் உணர்வெழுச்சியான உரைகளை  ஆற்றினர். தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்று, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான  மதியநேர உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 300 இற்கும் மேற்பட்ட மாவீரர் பெற்றோர்கள், உரித்துடையோர்கள், உணர்வாளர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து நன்றியுரைடன் உணர்மிக்க மதிப்பளிப்பு நிகழ்வு நிறைவுபெற்றது. இந்நிகழ்விற்கான பங்களிப்பினை பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் வழங்கியிருந்தனர்.

வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு! 1
வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு! 2
வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு! 3
வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு! 4
வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு! 5
வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு! 6
வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு! 7
வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு! 8
வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு! 9
வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு! 10
வடமராட்ச்சிக்கிழக்கில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு! 11
பகிர்ந்துகொள்ள

Leave a Reply