வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள்!

You are currently viewing வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள்!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு இரு தரப்பினரால் ஒரு தொகுதி மருந்துப் பொருட்களும் ஒரு இலட்சம் ரூபா பணமும் வழங்கப்பட்டன. அண்மைக் காலமாக குறித்த வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இவ்வாறு மருந்துப் பொருட்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் தம்பையா குலசிங்கம் அவர்களால் ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டதுடன், சித்தன்கேணி ஆன்மீகம் அறக்கட்டளையினரால் ஒரு இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ரதினி காந்தநேசன், வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கந்தையா இலங்கேஷ்வரன், சமூகமட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதி மா. நாகரட்ணம், ஆன்மீக அறக்கட்டளையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments