வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வாக்களிப்பு ஒத்திகை !

You are currently viewing வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வாக்களிப்பு ஒத்திகை !

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வாக்களிப்பு ஒத்திகை நடவடிக்கை ஒன்று இன்று (15) முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.

இன்று (15) காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை நடைபெற்ற இந்த வாக்களிப்பு நடவடிக்கையின் போது வாக்களிப்பு நிலையம் தொற்று நீக்கப்பட்டு பொது சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள்  தொற்று நீக்கப்பட்டு வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்களுக்கும் வாக்களர்களுக்கும் இடையில் இடைவெளி மற்றம் சுகாதார பாதுகாப்பு பின்பற்றப்பட்டு வாக்களிப்புக்கள் எவ்வாறு நடத்துவது என மாதிரி வாக்களிப்பு நடைபெற்றது .

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும்  மாவட்ட அரசாங்க அதிபருமான  க.விமலநாதன் தேர்தல் ஆணைக்குழுவின்  ஆணையாயளர் நாயகம் சமன்சிறீ ரத்நாயக்க  ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் நாடைபெற்ற வாக்களிப்பின்போது  மாவட்டதேர்தல் செயலக அலுவலக அதிகாரிகள் , பிரதேச செயலக அதிகாரிகள் , பொலீசார்.சுகாதார பிரிவினரின் பங்களிப்பில் மாதிரி வாக்களிப்பு நடவடிக்கை நடைபெற்றது .

இதன்போது வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள மன்னார்,வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை  உயர் அதிகாரிகளுக்கு தேர்தலில் மக்கள் வாக்களிப்பு குறித்து தேர்தல் ஆணைக்குழுவின்  ஆணையாயளர் நாயம் சமன் சிறீ ரத்நாயக்க  அவர்களினால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் கா.கந்தீபன் அவர்களினால் முல்லைத்தீவு வவுனியா மன்னார்  மாவட்டங்களின்  தேர்தல் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு வாக்களிப்பு விதிமுறைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சரியாக 10.00 மணிக்கு தேர்தல் மாதிரி வாக்களிப்பில் மக்கள் ஈடுபட தொடங்கியுள்ளார்கள்.12.00 மணிவரை இந்த வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

பொலீசாரின் பாதுகாப்புடன் இடம்பெற்ற இந்த ஒத்திகை வாக்களிப்பு நடவடிக்கையில் வாக்களிப்பு நிலையத்தின்  முன்னால் கைகழுவுவதற்கு  ஏற்பாடு செய்யப்பட்டு  சமூக இடைவெளியினை பேணி வாக்களார்கள் வாக்களிக்க சென்றுள்ளார்கள்.இதனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பொறுப்பதிகாரிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உறுதிப்படுத்துகினர்

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 250 வாக்காளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் 124 வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள் என்றும் திங்கட்கிழமை  என்பதால் வரவு குறைவாக காணப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டஉதவி  தேர்தல் ஆணையாளர்  கா.காந்தீபன் தெரிவித்துள்ளார்

அத்தோடு இந்த மாதிரி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டதோடு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல்  மற்றும்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகம்  எம் எம் முஹமட் ஆகியோரும் இந்த  மாதிரி தேர்தலில் கலந்துகொண்டனர்  

பகிர்ந்துகொள்ள