வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு )

You are currently viewing வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு )

வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

கொழும்பு – காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு  சிங்கள பேரினவாத  அரசினால் நடத்தப்பட்ட  தமிழின அழிப்பு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

சிங்கள பேரினவாத யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலேயே இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிகழ்வில் தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு ) 1
வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு ) 2
வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு ) 3
வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு ) 4
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments