விளையாட்டுத் துறை : “கொரோனா விதிகளை” உருவாக்குமாறு கூட்டமைப்புகளுக்கு கோரிக்கை!

  • Post author:
You are currently viewing விளையாட்டுத் துறை :   “கொரோனா விதிகளை” உருவாக்குமாறு கூட்டமைப்புகளுக்கு கோரிக்கை!

விளையாட்டு துறைத் தலைவர் Berit Kjøll தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளை விளையாட்டுக்காக தங்கள் சொந்த “கொரோனா விதிகளை” வரையறுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில், சுகாதார இயக்குனர் Bjørn Guldvog, ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சிகளை முடிந்தவரை நோய்த்தொற்று கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்க ஒழுங்கமைக்கும்படி கேட்டுள்ளார்.

ஐந்து பேருக்கு மேல் இருக்க முடியாது, இரண்டு மீட்டர் தூரம் இருக்க வேண்டும், தொற்று கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரு பொதுவான முன்நிபந்தனை என்று Guldvog மேலும் கூறியுள்ளார்.

கைகள் மற்றும் தலையுடன் தொடர்பு கொள்ளும் உபகரணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது, உடை மாற்றும் மற்றும் குளியல் அறைகள் பயன்படுத்தமுடியாது. உதாரணமாக ,நீங்கள் ஒரு கால்பந்து மைதானத்தில் பந்தை தலையால் (heade) அடிக்கக்கூடாது. மேலும் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த வேண்டிய அனைத்து விளையாட்டுகளிலும், அனைவரும் ஒரே உபகரணங்களில் கை வைக்காதபடி அதை ஒழுங்கமைக்க வேண்டும், என்று Guldvog மேலும் கூறியுள்ளார்.

பெரும்பாலான பயிற்சி ஏற்பாடுகளில் பெரியவர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுவது அவசியம் என விரும்புவதாக சுகாதார இயக்குனர் மேலும் கூறியுள்ளார் .

மேலும் குழந்தைகள் விளையாட்டுக்களில் ஈடுபடும் இடங்களில் பெரியவர்கள் இருக்க வேண்டும் என்று விளையாட்டுத் தலைவர் Kjøll ஒரு வலுவான வேண்டுகோளை விடுத்துள்ளார் .

அனைத்து, 55 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளையும் விளையாட்டுக்காக தங்கள் சொந்த கொரோனா விதிகளை உருவாக்க தயாராக இருக்க வேண்டும் என்று விளையாட்டுத் துறைத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்: NRK

பகிர்ந்துகொள்ள